பி.ஸ்.ஜி இல் இருந்து இடைநிறுத்தப்பட்ட மெஸ்ஸி
பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கால்பந்தாட்டக் கழகத்திலிருந்து ஆர்ஜென்டீன வீரர் லயனல் மெஸ்ஸி 2 வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கழகத்தின் அனுமதியின்றி சவூதி அரேபியாவுக்கு மெஸி சுற்றுலா சென்றமையே இதற்கான காரணம் என கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சவுதி அரேபியா விஜயம்
பி.எஸ்.ஜி கழகத்தின் வீரர்களுக்கு கடந்த திங்கட்கிழமை பயிற்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இப்பயிற்சியில் பங்குபற்றாமல், தனது குடும்பத்தினருடன் சவுதி அரேபியாவுக்கு மெஸ்ஸி சென்றுள்ளார்.
சவுதி சுற்றுலாத்துறையுடனான தனது ஒப்பந்தத்தின் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்காக அங்கு மெஸ்ஸி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தனது அனுமதியின்றி, பயிற்சியை தவிர்த்துவிட்டு சவூதி அரேபியாவுக்கு சென்றதால் 2 வாரங்களுக்கு அக்கழகத்திலிருந்து மெஸ்ஸி இடைநிறுத்தப்பட்டுள்ளார் என பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் மெஸ்ஸி இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிராக பி.எஸ்.ஜி கழகத்தின் தலைமையகத்துக்கு முன்னால் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மெஸ்ஸிக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படும் காலத்தில் அவர் பயிற்சியில் பங்குபற்றவோ, விளையாடவோ முடியாது. அக்காலத்தில் அவருக்கு சம்பளமும் வழங்கப்பட மாட்டாது என பிஎஸ்ஜி வட்டாரங்கள் தெரிவித்ததாக பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.