கால்பந்து வரலாற்றில் சாதனை படைத்த மெஸ்ஸி
ஆர்ஜன்டீனா நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி அவரது வாழ்க்கையில் 44வது கோப்பையை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இதுவரை எந்த கால்பந்து வீரரும் தனது வாழ்க்கையில் இவ்வளவு கோப்பைகளை வென்றதில்லை.
மெஸ்ஸி, பிரெஞ்சு கால்பந்து கழகமான PSG அணியை விட்டு வெளியேறி அமெரிக்க கால்பந்து கழகமான இன்டர் மியாமியில் சேர்ந்ததையடுத்து தனது முதல் சீசனிலேயே அணியை வெற்றிபெற செய்துள்ளார்.
லீக் கோப்பை 2023-ன் ஒரு பகுதியாக, நேற்றுமுன்தினம் (20.08.2023) நடைபெற்ற இறுதிப் போட்டியில் மியாமி நாஷ்வில்லை எதிர்கொண்டது.
மியாமி (10-9) பெனால்டி ஷூட் அவுட்டில் நாஷ்வில்லை வீழ்த்தி லீக் கோப்பையை வென்றது.
இந்த போட்டியில் வெற்றிக்கோப்பையை மெஸ்ஸி தனதாக்கிக்கொண்டதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நெகிழ்ச்சி செயல்
இதேவேளை போட்டி நிறைவடைந்து வெற்றிக்கோப்பையை கொடுக்கும் நேரத்தில் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார்.
அதாவது வெற்றிக்கோப்பையை தன்னிடம் இல்லாமல் சக வீரர்களிடம் பகிர்ந்தளிக்குமாறு தெரிவித்திருந்தமை ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்குரிய விடயமாக மாறியுள்ளது.
Este equipo ?? pic.twitter.com/cXrFCf2fPc
— Inter Miami CF (@InterMiamiCF) August 20, 2023

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri
