எம் மத்தியில் காணப்படும் பாரிய சவால் - பிரதமர் மகிந்த

Weather People Mahinda Rajapaksa United Nation
By Independent Writer Oct 30, 2021 09:42 AM GMT
Report

நிலையான அபிவிருத்தி தொடர்பில் முழு உலகினதும் கவனத்தைத் திருப்பும் உலக நகர தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,

நகரமயமாக்கல் என்பது ஒரு நாட்டின் சமூக வளர்ச்சியின் தனித்துவமான பிரதிபலிப்பாகும். எனினும் நகர்ப்புற வாழ்க்கைச் சூழலை நிலையான எண்ணக்கருவின் ஊடாகவே நாம் ஊக்குவிக்க முடியும்.

காலநிலை மாற்ற விளைவுகளை எதிர் கொள்ளக்கூடிய நகரங்களை நிர்மாணிப்பது எம் மத்தியில் காணப்படும் பாரிய சவாலாகும். அதற்கான கொள்கை தீர்மானங்களை உரிய நேரத்தில் முன்னெடுப்பதற்கு நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

சமீபத்திய வரலாற்றில் நகர அபிவிருத்தி தொடர்பில் அதிக அவதானம் செலுத்துவதற்குக் கொள்கை ரீதியில் நிலையான நகர்ப்புற சூழலை நிர்மாணிப்பதற்கான செயற்பாடுகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

இன்று உலக சனத்தொகையில் சுமார் 55 சதவீதமானோர் நகர்ப்புற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இந்த தொகையானது 2055ஆம் ஆண்டளவில் 70 சதவீதம் வரை உயர்வடையும் என ஐக்கிய நாடுகள் சபை இதுவரை மதிப்பிட்டுள்ளது.

அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதனால் இலங்கையிலும் நகரமயமாக்கல் நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்கின்றமை உண்மையே.

இவ்வாறு தினமும் அதிகரித்துவரும் நகர்ப்புற மக்களுக்கான வீட்டு வசதிகள், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றை நாம் மேம்படுத்த வேண்டும்.

நகர்ப்புற சூழலில் குப்பைகளை அகற்றல் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகள், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் மற்றும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியன சாதாரணமானவை அல்ல.

காலநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்வதற்கு நகரை ஏற்புத்திறன் கொண்ட தாக்குதல் என்ற இவ்வாண்டின் உலக நகர தின தொனிப்பொருளின் ஊடாக இதிலுள்ள சவால் மேலும் தெளிவுபடுத்தப்படுகிறது.

உலகளாவிய நகரமயமாக்கலில் சர்வதேச சமூகத்தின் ஆர்வத்தை மேம்படுத்தல், நகரமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகளுக்காக நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் உலகளாவிய நிலையான நகர்ப்புற வளர்ச்சிக்குப் பங்களிக்கும் எதிர்பார்ப்புடன் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை இத்தினத்தை பிரகடனப்படுத்தியது.

பிரதான நகரங்களுக்கும், கிராமப்புற நகரங்களுக்கும் இடையே ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. அனைத்து மக்களுக்கும் பொதுவான நகர வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் மிக நீண்டகாலமாக அபிவிருத்தி செய்யப்படாத நூறு நகரங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நாம் தற்போது செயற்படுத்தியுள்ளோம்.

ஒழுங்கற்ற நகரமயமாக்கலின் விளைவாகவே நகரை அண்மித்த குடிசைகளும், சேரிகளும் தோற்றம் பெறுகின்றன. நகர அபவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் மற்றும் பிரதமர் என்ற ரீதியில் நிலையான அபிவிருத்தியின் ஊடாக உயர் வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்திக் கொடுத்து நிலையான நகர வசதிகளை மக்கள் அனுபவிக்கக் கூடிய வகையில் மக்களுக்கு முறையான நகரங்களை உரித்தாக்குவதே எனது எதிர்பார்ப்பாகும்.

அதற்காக நகரமயமாக்கலின் அபிவிருத்தி இலக்கை அடைவதன் மூலம் சிறந்த நகரம் மற்றும் நல்ல வாழ்க்கை முறைக்காக அனைவரும் ஒன்றிணைவார்கள் என நாம் நம்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US