ஜனாதிபதியின் செயலாளருக்கு குணவங்ச தேரர் வழங்கிய செய்தி
கமத்தொழிலாளர்கள் வயலில் கால் வைத்தால் மட்டுமே நாம் உணவில் கை வைக்க முடியும் என எல்லே குணவங்ச தேரர்,(Elle Gunawansa Thero) ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்திடம் கூறியுள்ளார்.
காமினி செனரத் ஜனாதிபதியின் செயலாளராக பதவியேற்ற பின்னர், எல்லே குணவங்ச தேரரை சந்தித்த கொழும்பில் உள்ள தர்ம நிறுவனத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது குணவங்ச தேரர் ஜனாதிபதியின் செயலாளருக்கு முக்கிய செய்தியை வழங்கியுள்ளார். உங்களது நியமனம் நல்லது என பேச்சை ஆரம்பித்துள்ள தேரர், மக்களின் பிரச்சினை குறிப்பாக கமத்தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து கூடிய கவனம் செலுத்துங்கள்.
கமத்தொழிலாளி வயலில் இறங்கி வேலை செய்தால் தான், நாம் சோறை சாப்பிட முடியும் எனக் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்திய இரசாயன உர தடை காரணமாக சேதனப் பசளையை பயன்படுத்தும் திட்டம் காரணமாக கமத்தொழிலாளருக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்கள் குறித்தே குணவங்ச தேரர், மறைமுகமாக ஜனாதிபதியின் செயலாளருக்கு கூறியுள்ளார்.



