மேர்வின் சில்வா ஒரு நீண்டநாள் மனநோயாளியா! வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கேள்வி
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா ஒரு நீண்டநாள் மனநோயாளியா? அல்லது தன்னை சிங்கள மக்கள் பெருமையாக நினைப்பார்கள் என நினைத்து எல்லை மீறிய நாகரிகமற்ற வார்த்தைகளால் உளறி வருகிறாரா? என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் இன்றையதினம் (14.08.2023) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது, அண்மையில் ஒரு கூட்டத்தில் பேசும் போது பல விடயங்களை பேசினாலும் வடக்கு - கிழக்கு தமிழர்கள் தொடர்பில் அவர் பேசியது அடிப்படை மனிதவுரிமை மீறல் மாத்திரமல்ல சட்டத்தை தன்னுடைய கையில் எடுத்துள்ளார்.
ஆட்சியாரின் மறைமுக சர்வாதிகாரம்
அதாவது வட கிழக்கில் தமிழர்கள் விகாரைகளில் கை வைத்தால் அவர்களது தலையை களணிக்கு கொண்டு வருவேன் என ஊளையிட்டுள்ளார்.
இதற்கு முன்னைய காலத்தில் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை அம்மையாரை திருமணம் செய்வதாக வாய் கிழிய கத்தினார்.
அதன் பின்னர் முன்னேஸ்வரம் ஆலய வேள்வியை தடுப்பதாக பிதற்றினார், இறுதியில் மன்னிப்பு கேட்டார். தற்போது தமிழரின் தலையை எடுக்கிறாராம்.
உண்மையான சட்டவாட்சி நடைபெறுவதை ஜனாதிபதி உறுதி செய்ய வேண்டுமாக இருந்தால் உடனடியாக சட்ட நடவடிக்கையை எடுத்து மனிதவுரிமைகளை பாதுகாக்க வேண்டும், இல்லாவிட்டால் மேர்வின் சில்வாவின் கருத்தை ஆட்சியாரின் மறைமுக சர்வாதிகாரமாக புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழர்களை இனவாதிகளையும் மனநோயாளிகளையும் வைத்து கிள்ளுக்கீரையாக பாவிக்க நினைத்தால் நாடு மீண்டும் மிகப் பெரும் அதள பாளத்தில் எதிர்காலத்தில் செல்லும் என்பதை தென்னிலங்கை சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 19 மணி நேரம் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல் News Lankasri
