திருகோணமலையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான உளநல செயலமர்வு
திருகோணமலை(Trincomalee) - தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான உளநலம் தொடர்பான செயலமர்வொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த செயலமர்வானது இன்று (14.06.2024) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
உளநல செயலமர்வு
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதலுக்கிணங்க இடம்பெற்ற குறித்த நிகழ்வில், உளநலம் உள்ளிட்ட உளநெருக்கடி இதனை தீர்ப்பதற்கான ஆலோசனைகள் போன்றன தெளிவூட்டப்பட்டுள்ளன.
இதேவேளை, குறித்த நிகழ்வுக்கு வளவாளராக கிண்ணியா தள வைத்தியசாலையின் உளநலப் பிரிவின் வைத்தியர் ஏ.கே.எம்.நஸ்மி கலந்து கொண்டுள்ளார்.
மேலும், இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிருவாக உத்தியோகத்தர் B.U.B.L.உடகெதர உட்பட சக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |