இலங்கையர்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல் - ஒருவர் பலி - நூற்றுக்கும் அதிகமானோர் பாதிப்பு
அம்பாந்தோட்டை, அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் மெனிஞ்சைடிஸ் எனப்படும் மூளைக்காய்ச்சல் நோய் பரவி வருவதாக சந்தேகிக்கப்படுகிறது.
1500க்கு மேற்பட்ட கைதிகள் அந்த சிறையில் உள்ளனர். பாதிக்கப்பட்ட கைதி ஒருவர் இந்த நோய் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் சுகாதார பிரிவினர் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 17 கைதிகளில் இருவருக்கு மூளைக்காய்ச்சல் இருப்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூளைக்காய்ச்சல்
இது தவிர, காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 7 கைதிகள் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

தெனியாய பகுதியில் உள்ள நான்கு பாடசாலைகளில் ஆரம்பமான இந்நோய் தற்போது தியத்தலாவை, ரிகில்லகஸ்கட, வெலிமடை போன்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
அத்துடன், இப்பகுதிகளில் இருந்து மூளைக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் 116 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோய் பிரிவு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையைச் சேர்ந்த சில கைதிகள் காய்ச்சல் காரணமாக அம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவ்வாறு அனுமதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளார் தெரிவித்துள்ளார்.
தற்போது அங்கு மேலும் 20 கைதிகள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களும் மூளைக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோயாளர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரத் துறையினர்
தெனியாய 50 மூளைக்காய்ச்சல் நோயாளர்களும், தியத்தலாவையில் 28 நோயாளர்களும், ரிகில்லகஸ்கட பகுதியில் 25 நோயாளர்களும், வெலிமடையில் 13 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதான தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நாட்டில் இதுவரை மூளைக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் 116 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தெனியாய பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு மூளைக்காய்ச்சல் பரவுவதற்கு அங்குள்ள அசுத்தமான நீரூற்றுகளும் உணவுகளுமே காரணம் எனத் தெரியவந்தது.
இதனையடுடுத்து, அப்பகுதியில் உள்ள நீரூற்றுகள் மற்றும் ஏனைய மூலங்களை தூய்மைப்படுத்துவதற்கு சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
எனினும் பாதிக்கப்பட்ட ஒருவரின் மற்றும் ஆரோக்கியமான ஒருவரின் வாய் வழியான உமிழ்நீர் மூலமும் இந்நோய் பரவக்கூடும் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மூளைக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். இது ஒரு தீவிரமான நோய் என்பதால் உடனடியாக சிகிச்சை பெறாவிட்டால் பல்வேறு சிக்கல்கள் காரணமாக மரணம் ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுதான் உங்க குழந்தை இல்லையே.. தங்கமயில் சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியில் சரவணன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் Cineulagam
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri