கனடாவில் இந்து ஆலயத்தில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்
கனடாவின் பிரம்டன் நகரில் உள்ள சிறி கற்பக விநாயகர் ஆலயத்தில் முகமூடியணிந்த நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அண்மை காலமாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகின்றது.
வெளியான காணொளிகள்
குறித்த ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற வேளையில் உள்ளே புகுந்த முகமூடியணிந்த கொள்ளையர்கள் உண்டியலை கொள்ளையிட்டு தூக்கிக்கொண்டு செல்லும் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இவ்வாறு கொள்ளையர்கள் கொள்ளையிடும் சந்தர்ப்பத்தில் பக்தர்களும் ஆலய மதகுமாரும் செய்வதறியாது பார்த்துக் கொண்டிருப்பதும் பதிவாகியுள்ளது.
அதேவேளை, குறித்த சம்பவம் இடம்பெற்ற போது அங்கிருந்த பக்தர்களும் ஆலய மதகுருமாரும் அதிர்ச்சியடைந்திருந்தமை காணொளிகளில் காணக்கூடியதாக உள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |