மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழப்பு
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்லிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.
பிள்ளையார் கோயில் வீதி, பட்டிப்பளை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தவராசா திலகராஸ் (வயது 39) என்பவரே நேற்று (3.12.2023) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது பிள்ளையின் பிறந்தநாளுக்காக உணவுப்பொருட்கள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வீதியின் அருகில் நின்ற பாம்பு தீண்டியதில் அவர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
திடீர் மரண விசாரணை
எனினும், அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வேண்டுகோளுக்கமைவாக சம்பவ இடத்துக்குச் சென்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார், சடலத்தைப் பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரிக்குப் பரிந்துரைத்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்திற்கு அருகில் நகரும் “மிக்ஜாம்” சூறாவளி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan