முள்ளிவாய்க்கால் நினைவாக இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட கஞ்சி பரிமாறும் நிகழ்வு (Vides)

Mullaitivu Mullivaikal Remembrance Day Sri Lanka
By Siva Thileep May 13, 2022 10:29 AM GMT
Report

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வுகள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

முல்லைத்தீவு,

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவாக இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட கஞ்சி பரிமாறும் நிகழ்வு (Vides) | Memory Of Mullivaikkal Porridge Serving Porridge

இந்நிகழ்வானது  இன்று (13) வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது  “கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்” என்ற தொனிப்பொருளில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

முள்ளிவாய்க்கால் நினைவாக இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட கஞ்சி பரிமாறும் நிகழ்வு (Vides) | Memory Of Mullivaikkal Porridge Serving Porridge

மே 12 முதல், மே 18 வரை தமிழினப்படுகொலை வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை யுத்தத்தில் தமிழ் மக்கள் உணவாக உட்கொண்ட உப்பு கஞ்சியை இந்த வாரத்தில் அனைத்து மக்களுக்கும் வழங்கி முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் கதையை கடத்துவதோடு இனப்படுகொலைக்கு நீதி கோரும் அங்கமாக இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு வடக்கு கிழக்கு மாகாணம் எங்கிலும் நேற்றுமுதல் (12) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

புலனாய்வாளர்களின் கெடுபிடிகளுக்கு மத்தியில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கஞ்சி வழங்கும் செயற்பாட்டை காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொது அமைப்பினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவாக இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட கஞ்சி பரிமாறும் நிகழ்வு (Vides) | Memory Of Mullivaikkal Porridge Serving Porridge

கஞ்சி வழங்கும் செயற்பாட்டினை ஆரம்பிக்க குறித்த பகுதிக்கு ஏற்பாட்டாளர்கள் வருகை தந்த நிலையில் புலனாய்வாளர்கள் வருகை தந்து புகைப்படம் எடுத்து கண்காணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம்,

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு வாரத்தின் இரண்டாம் நாள் உப்பில்லா கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம்- வடமராட்சி கொற்றாவத்தை சல்லியாவத்தை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவாக இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட கஞ்சி பரிமாறும் நிகழ்வு (Vides) | Memory Of Mullivaikkal Porridge Serving Porridge

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த உப்பில்லா கஞ்சி வழங்கும் நினைவேந்தல் நிகழ்வில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்கத்தின் தலைவர் வணக்கத்துக்குரிய வேலன் சுவாமிகள் கலந்துகொண்டு உப்பில்லா கஞ்சி வழங்கி வைத்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவாக இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட கஞ்சி பரிமாறும் நிகழ்வு (Vides) | Memory Of Mullivaikkal Porridge Serving Porridge

இதேவேளை அங்கு கூடியிருந்த புலனாய்வாளர்களும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் உப்பில்லா கஞ்சி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

முள்ளிவாய்க்கால் நினைவாக இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட கஞ்சி பரிமாறும் நிகழ்வு (Vides) | Memory Of Mullivaikkal Porridge Serving Porridge

இதில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பினர் அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு,

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது இன்று (13) மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள படுகொலை நினைவுத்தூபி முற்றத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவாக இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட கஞ்சி பரிமாறும் நிகழ்வு (Vides) | Memory Of Mullivaikkal Porridge Serving Porridge

இதனைத்தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் கருத்து தெரிவிக்கையில்,

“இந்த நாட்டுக்கு மீண்டும் மீண்டும் கடன்களை வழங்கி தமிழினத்தை அழிப்பதற்கு சர்வதேச சமூகம் உதவக்கூடாது.இந்தவேளையில் இங்கு நடைபெற்ற இன அழிப்புகான நீதிவிசாரணைக்கான அழுத்தங்களை சர்வதேசம் வழங்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவாக இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட கஞ்சி பரிமாறும் நிகழ்வு (Vides) | Memory Of Mullivaikkal Porridge Serving Porridge

இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவுத்தின கஞ்சிகள் மக்களுக்கு வழங்கப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் உட்பட அனைத்து பகுதிகளிலும் இடம்பெற்ற படுகொலைகளில் உயிரிழந்தவர்களின் ஞாபகார்த்தமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவாக இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட கஞ்சி பரிமாறும் நிகழ்வு (Vides) | Memory Of Mullivaikkal Porridge Serving Porridge

இந்த நிகழ்வில் கிழக்கில் நடைபெற்ற படுகொலைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், கோறளைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சேகர் உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலைக்கழகம்,

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வாரத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவாக இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட கஞ்சி பரிமாறும் நிகழ்வு (Vides) | Memory Of Mullivaikkal Porridge Serving Porridge

இதன்போது மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தியதோடு மலரஞ்சலியும் செலுத்தி உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவாக இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட கஞ்சி பரிமாறும் நிகழ்வு (Vides) | Memory Of Mullivaikkal Porridge Serving Porridge

முள்ளிவாய்க்கால் நினைவாக இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட கஞ்சி பரிமாறும் நிகழ்வு (Vides) | Memory Of Mullivaikkal Porridge Serving Porridge

 வவுனியா

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் நேற்று முதல் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றையதினம் வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

வவுனியா அண்ணாநகர் பிள்ளையார் கோவிலடியில் இடம்பெற்ற நிகழ்வில் முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்றதனை நினைவு கூர்ந்து இச்செயற்பாட்டை முன்னெடுத்ததாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.

GalleryGallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US