முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர் நினைவேந்தலில் குழப்பம்
முல்லைத்தீவில் உள்ள கரையோர மாவீரர் நாள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாவீரர் நாள் நினைவேந்தலில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த அமைப்பின் உறுப்பினரான ரமேஷ் டிலக்சன் வெளியிட்டுள்ள காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, "கடந்த 6 வருடங்களுக்கு மேலாக முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி வருகின்றோம்.
இது மக்கள் சார்பாக பொதுப்படையாக மேற்கொள்ளப்பட்டு வருவது தான். எனவே, அந்த கடற்கரை பகுதியில் ஏற்பாட்டு குழு மூலம் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும்.
குறித்த நிகழ்வுகளுக்காக பொதுமக்களிடம் பொருட்களாகவே பெற்றுக் கொண்டிருந்தோம். இந்நிலையில், கடந்த வருடம் எங்களுக்கு நிதி உதவி அளிக்க சிலர் முன்வந்தனர்.
இதற்கிடையில், குறித்த நிதிக்கான கணக்கு வழக்குகளை நிதி அளித்தவர்களுக்கு காண்பிக்க வேண்டும் என யோசனை முன்வைத்த போது, ஏற்பாட்டு குழுவினர் மறுத்தனர்.
ஏற்பாட்டு குழுவை சேர்ந்த நபர் மாவீரர் தின நிகழ்வை மேற்கொள்ள விட மாட்டேன் என்றதுடன் கடந்த வருடம் தயார்படுத்தப்பட்டிருந்த நிகழ்வில் குழப்பத்தை ஏற்படுத்தினர்" என குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் பதிவான முழு காணொளி மற்றும் தொடர்ந்த குழப்பநிலை தொடர்பிலான தகவல்களுடன் வருகின்றது பின்வரும் காணொளி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |