ஹொங்கொங்கில் பாரிய தீ விபத்து.. தீயணைப்பு வீரர் உட்பட நால்வர் பலி!
ஹொங்கொங்கில் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்களின் ஒருவர் தீயணைப்பு வீரர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரண்டு பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
தீயணைப்பு வீரர்கள் முயற்சி
முன்னதாக, கட்டிடங்களில் மக்கள் சிக்கியிருப்பதாக கூறப்பட்ட போதிலும், மேலும் யாராவது உள்ளே இருக்கிறார்களா என தெரியவில்லை எனவும் ஹொங்கொங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டடத்துக்கு வெளியே உள்ள மூங்கில் மரங்களிலும் தீ பரவி வருகின்றது.
இந்நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


