முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் 17வது நினைவேந்தல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் 17வது நினைவேந்தல் யாழ். இணுவில் பகுதியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மானிப்பாய் தொகுதி காரியாலயத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். கிளிநொச்சி மாவட்டங்களின் தலைமைக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.
சுட்டுப் படுகொலை
கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதியன்று கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபடச் சென்ற போதே ஆயுத தாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த நிகழ்வின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட தொகுதிகளின் அமைப்பாளர்கள் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam