யாழ்.பல்கலையில் நாளை மீண்டும் திறக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மீள கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த ஜனவரி மாதம் 8 ம் திகதி பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உணர்வாளர்கள், அரசியல் பிரமுகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பல்கலைக்கழக மாணவர்களால் உண்ணாவிரதப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான கடும் எதிர்ப்பு அழுத்தங்களுக்குப் பின் மீண்டும் அதனை அதே இடத்தில் கட்ட பல்கலைக்கழக நிர்வாகத்தினர் முன்வந்தனர்.
இவ்வாறாக கடந்த ஜனவரி 11 ம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டுக் கட்டப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 16 மணி நேரம் முன்

பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ரூட்டை மாற்றிய பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்... வைரலாகும் வீடியோ Cineulagam

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
