வீரமுனைப் படுகொலையின் நினைவு நாள்

Sri Lankan Tamils Tamils Ampara
By Independent Writer Aug 12, 2025 11:46 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

அம்பாறை வீரமுனை கிராமத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட வீரமுனைப் படுகொலையின் நினைவு நாள் நேற்றாகும்.

வரலாற்றுக்கு முந்திய நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த வீரமுனை எனும் தமிழ்கிராமம் இன்று அந்த மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது.

1945ஆம் ஆண்டிலிருந்து 1991ஆம் ஆண்டுவரை தொடர் தாக்குதலுக்குள்ளாகி ஆக்கிரமித்து அழிக்கப்பட்டுவிட்டதன் நினைவே வீரமுனை படுகொலை நினைவேந்தல் தினமாகும். 

சுமந்திரனின் கடையடைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது! மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லம் கடும் எச்சரிக்கை

சுமந்திரனின் கடையடைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது! மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லம் கடும் எச்சரிக்கை

உறவுகளுக்கான குரல்

இந்த நிலையில், வீரமுனைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு 35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் மாலை ஆலய பூசையுடன் ஆரம்பமானது.


ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து 2 நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் படுகொலை செய்யப்பட்டவர்கள் ஞாபகார்த்த தூபியில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து ஆலய வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

வீரமுனைப் படுகொலையின் நினைவு நாள் | Memorial Day Of The Veeramunai Massacre 

1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.

சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இன வன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990இல்  தஞ்சம் புகுந்திருந்தனர்.

இக்காலகட்டத்தில், ஆகஸ்ட் 12ஆம் திகதி அங்கிருந்த ஊர்காவல்படையினர் மற்றும் இராணுவத்தின் துணையுடன் இந்த படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதாக பதிவுகள் பல உள்ளன.

தன்போது 400க்கும் அதிகமான தமிழ் மக்களை சுட்டும் வெட்டியும் தாக்கினர். இவர்களில் பெண்கள் குழந்தைகள் உட்பட 55 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். அதிகமானோர் படுகாயமுற்றனர். அவ்வேளையில் கடத்தப்பட்டோர் பற்றி எவ்விதத் தகவலும் இதுவரையில் இல்லை.

அமெரிக்காவில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கிய விமானம்

அமெரிக்காவில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கிய விமானம்

இவ்வாறு படுகொலை நடந்து அதில் படுகாயமடைந்தவர்கள் அம்பாறை உட்பட பல வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டபோதும் அவர்களும் அங்கிருந்து கொண்டுசெல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

1990ஆம் ஆண்டு வீரமுனை மக்கள் முற்றாக அங்கிருந்து துரத்தப்பட்டு அக்கிராமத்தினை அபகரிக்க மேற்கொண்ட முயற்சி அன்றைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கோவிந்தன் கருணாகரத்தின் முயற்சியினால் தடுத்து நிறுத்தப்பட்டு வீரமுனை மக்கள் மீள குடியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இளையதம்பி சிறிநாத், ஞானமுத்து சிறிநேசன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆகியோர் கலந்து  கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மேலும்,  குறித்த நிகழ்விற்கு சம்மாந்துறை பொலிஸார் பலத்த பாதுகாபபு வழங்கியுள்ளனர்.

 வீரமுனைப் படுகொலையின் நினைவு நாள் | Memorial Day Of The Veeramunai Massacre

 

சுவிட்சர்லாந்து இந்து ஆலயங்களில் திருடர்களின் கைவரிசை

சுவிட்சர்லாந்து இந்து ஆலயங்களில் திருடர்களின் கைவரிசை

 வீரமுனைப் படுகொலையின் நினைவு நாள் | Memorial Day Of The Veeramunai Massacre

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Vancouver, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
அகாலமரணம்

ஏறாவூர், St. Gallen, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

12 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கல்வியங்காடு

12 Aug, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US