அவமதிக்கப்பட்ட சமயத் தலைவர்! யாழில் பலரையும் முகம் சுழிக்க வைத்த சம்பவம்
யாழில் கடந்த 26ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
அநாகரிக நடத்தைகள்
குறித்த இடத்தில் பதிவாகிய முரண்பாடுகளும், அநாகரிக முறையிலான நடத்தைகள் என்பன அதிகம் பேசப்பட்டதுடன், இது தொடர்பில் அதிகளவில் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் குறித்த இடத்தில் தொடர்ந்தும் அமைதியின்மை காணப்பட்டமையால், வேலன் சுவாமிகள் அமைதி காக்குமாறு கூறிய போது, அவரை அவமதிக்கும் வகையிலான வார்த்தைகளை கொண்டு பேசியிருந்ததாகவும் தெரியவருகிறது.

உண்மையில் தியாகி திலீபன் மற்றும் மாவீரர்கள் ஆகியோரின் நினைவேந்தல்களை தமிழர்கள் நடத்துவது இனத்திற்காக உயிர் நீத்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலான ஒரு நிகழ்வாக காணப்படுகிறது.
தவறான முன் உதாரணம்
அத்துடன் தமிழர்களாகிய நாம் பெரியோர்களையும், சமயத் தலைவர்களையும் மதித்து நடக்க வேண்டியது அவசியம் என்பது எமது குருதி வழியாக எமக்கு வழங்கப்பட்டுள்ள ஞானமாக இருக்கிறது.
என்ற போதும் கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் பெயர் பெற்ற யாழ். மண்ணில் தமிழ் இனத்திற்காக உயிர்நீத்தவரை நினைவுகூர திரண்டிருந்த குறித்த சந்தர்ப்பத்தில் முன்னெடுக்கப்பட்ட அந்த அநாகரிக நடவடிக்கையானது கண்டிக்கப்படுவதுடன், இது நாளைய தலைமுறையினர் மத்தியில் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது எம் அனைவரினதும் கடமையாகும்.
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam