ஹட்டனில் சட்ட விரோத கட்டங்களுக்கு சில உறுப்பினர் ஆதரவு! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
ஹட்டனில் நகரசபை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டத்திற்கு ஆதரவாக சில எதிர்கட்சி உறுப்பினர்கள் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சில காணிகளுக்கு சட்டபூர்வமான ஒப்பனை செய்வதற்கு அடிப்படையான ஆவணங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுக்கு தெரியப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்தார்.
ஹட்டன் டிக்கோயா நகர சபை கடந்த காலங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் ஹட்டன் டிக்கோயா நகரசபைக்கு உட்பட்ட பகுதியில் பல சட்டவிரோத அனுமதியற்ற கட்டடங்கள் நிர்மானிக்கப்பட்டுள்ளன.
நடவடிக்கை
இது குறித்த கடந்த கால ஆட்சியில் இருந்த உறுப்பினர்கள் முதல் உரிய அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அதற்கு எதிராக எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் ஆட்சியில் அமர்ந்தவர்களுக்கு அறிவித்தும் கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக தாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை சட்ட ரீதியாக மேற்கொள்ளாது உயரதிகாரிக்கு இந்த கட்டடங்கள் தொடர்பாக தனிநபர்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளதனால் நடவடிக்கை எடுக்க முடியாது என அறிவித்துள்ளனர்.
விபத்து
இந்த சட்டவிரோத கட்டடம் காரணமாக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மண்திட்டு சரிந்து வீழ்ந்து விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த சட்டவிரோத கட்டடம் குறித்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.