ஜனாதிபதியை சந்தித்த கிழக்கு மாகாண முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று(06.03.2024) காலைநாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்றுள்ளது.
இதன் போது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரப்பில் சில விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடுகள்
இந்நிலையில் குறித்த விடயங்களை கிழக்கு மாகாண ஆளுநருக்கும், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான தொடர்ச்சியான சந்திப்புக்கள் ஊடாக முஸ்லிம்களின் பிரச்சினைகளை பேசி தீர்க்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும், அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தேவையான போதுமான நிதி ஒதுக்கீடுகளை ஒதுக்கும் விடயங்கள் குறித்து மட்டும் உரிய அதிகாரிகளுடன் பேசி ஏற்பாடு செய்வதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், நாடாளு மன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், ஏ.எல்.எம். அதாஉல்லா, பைசால் காஸிம், செய்யத் அலிஸாஹிர் மௌலானா, சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |