மொட்டுக் கட்சியில் இணையவுள்ள எதிர்க்கட்சியின் 5 முக்கிய உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய ஐந்து உறுப்பினர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இணையலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (01.04.2023) ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவரே இதனை கூறியுள்ளார்.
மேலும் இப்போது பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் இறுதியை அடைவதற்குச் சிறிது காலம் எடுக்கும்.
பொருளாதார மீட்சிக் கொள்கை
மேலும், பேச்சுவார்த்தைக்கு இடையூறு விளைவிக்கும் என்ற அடிப்படையில் பெயர் குறிப்பிட விரும்பாத அவர், சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார மீட்சிக் கொள்கை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
