நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சு சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர்: சபாநாயகர்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரத்தை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறாக பயன்படுத்தி கருத்துக்களை வெளியிட்டு வருவதன் மூலம் தமக்கு வாக்களித்த மக்களுக்கு அகௌரவத்தை ஏற்படுத்தி வருவதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda yapa Abewardana) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எதிர்ப்பை வெளியிடுவது பொருத்தமானது மற்றும் நியாயமானது என நினைத்தாலும் நாடு அதனை ஏற்றுக்கொள்ளாது.
இதன்மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்திற்கே பாதிப்பு ஏற்படுகிறது.
அண்மைய காலமாக எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை காட்சிப்படுத்தி, நாடாளுமன்றத்தில் தவறான நடத்தையை வெளிக்காட்டும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன.
சட்டங்களை கொண்டு வந்து இவற்றை கட்டுப்படுத்த எந்த எண்ணமும் இல்லை என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
