ஒரு தாயின் 10 ரூபா பணத்தை முதலீடாக வைத்து நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளேன்:முசாரப்(Photos)
ஒரு ரூபா பணமும் இல்லாமல் ஒரு தாயின் 10 ரூபா உட்பட மக்களின் பணம் மற்றும் பங்களிப்பின் மூலம் மிகப்பெரும் பணக்கார வேட்பாளர்களை எதிர்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினரானவன் நான் என நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் தெரிவித்துள்ளார்.
கல்முனை இ- பெஸ்ட் கல்வி நிறுவனத்தின் கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் நேற்று (07.01.2023) கலந்துகொண்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனை
அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு புள்ளிவிபரவியல் தகவலின் படி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகின்றவர்கள் 4 சதவீதம் என்றால் சிறைச்சாலைக்கு செல்பவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள். போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் அதிகம் இருக்கின்றார்கள்.
இப்பொழுது பெரும் ஆபத்து எம் சமூகத்தில் நிலவி வருகின்றது. அதுமாத்திரமன்றி ஒரு ஊடகவியலாளராக இருந்து அதிகளவான எதிரிகளை சம்பாதித்துள்ளேன்.
மக்கள் நம்பிக்கை
ஆனால் இன்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக ஒரு தாயின் 10 ரூபா பணத்தை முதலீடாக வைத்து வந்துள்ளேன். பணம் கொடுத்து வாக்குகளை பெறாமல் மக்கள் பணம் கொடுத்து என்னை அதாவது ஊடகவியலாளனை நாடாளுமன்ற உறுப்பினராக உருவாக்கியுள்ளனர்.
எனவே இளைஞர்களினால் சாதிக்க முடியும் என்ற நிலைமை தோன்றியுள்ளது என தெரிவித்துள்ளார்.



