மரண வீடுகளுக்கு கூட செல்ல அச்சப்பட்ட இலங்கை அரசியல்வாதிகள்! பசிலை சந்தித்த பின்னர் எஸ்.பி.திஸாநாயக்க கூறிய விடயம்
எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில் போட்டியிடுவோம். மேலும் நாம் தேர்தல் தொடர்பில் அச்சமடையவில்லை என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சவை, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது எஸ்.பி.திஸாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேர்தலுக்கு நாம் அஞ்சவில்லை..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற ரீதியில் பொறுப்புகளை சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு வழங்குமாறும் கோரினோம். இருப்பினும் அவர்கள் வழங்கவில்லை. இது தொடர்பில் நாம் கவலையடைகிறோம்.
தற்போது நடைமுறையிலுள்ள வேலைத்திட்டங்களுக்கு வலு சேர்க்கும் நிலைப்பாட்டில் நாம் இருக்கிறோம்.
எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில் போட்டியிடுவோம். மேலும் நாம் தேர்தல் தொடர்பில் அச்சமடையவில்லை.
இருப்பினும் நாம் அச்சமடைந்தோம். அச்சத்தோடு மாத்திரம் இருக்கவில்லை. கிராமங்களுக்கு கூட செல்ல முடியாத நிலை காணப்பட்டது. மரண வீடுகளுக்கு கூட செல்ல முடியாத நிலை காணப்பட்டது.
தற்போது அவ்வாறில்லை. எமது தரப்பினர்கள் சுதந்திரமாக கிராமங்களுக்கு சென்று மக்களுடன் வாழ்கின்றனர் என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |