ரிசாட் பதியூதீன் கைது செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் அல்ல - சஹான் பிரதீப்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் மேலும் சிலரை எதிர்காலத்தில் கைது செய்ய உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் நுவரெலியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றின் பரிந்துரைக்கமையவே நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாறாக ஏதேச்சையாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்ய வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை.எதிர்காலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படவுள்ளனர்.
பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க மக்களுக்கு ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் நியாயத்தை வழங்கும் என்ற எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது.அதனை நிறைவேற்ற படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆகவே ரிசாட் பதியூதீன் கைது செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் அல்ல.அவர் தாக்குதலுடன் தொடர்புப்படவில்லையாயின் எதிர்காலத்தில் அவருக்கு பிணை வழங்கப்படும்.அவர் சம்பந்தப்பட்டிருந்தால் அவருக்கு தண்டணை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri