பொது ஆவணம் தாயாரிக்க பத்து பேர் கொண்ட குழு!தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டத்தில் முடிவு

Tamils Colombo University of Peradeniya ITAK
By Rakesh Apr 10, 2026 10:29 AM GMT
Report

இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டு வரும் நோக்கில் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையினால் ஆராயப்பட்டது.

நேற்று(9.4.2026) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டாவது சந்திப்பில் புதிய அரசமைப்பில் உள்வாங்கப்படவேண்டிய அடிப்படை அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்த விடயத்தை ஒட்டி கட்சிகள் எல்லாவற்றினாலும் ஏற்றுக்கொள்ளத் தக்க ஆவணம் ஒன்றை தயாரிக்கும் பணிக்காக சட்டத்துறையினர் ஐவரையும், கட்சிகளின் ஐந்து பிரதிநிதிகளையும் கொண்ட குழு ஒன்றை நியமிப்பதற்கு நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று சட்டத்தரணிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்.வடமராட்சியில் ஊடகவியலாளர் மற்றும் சமாச தலைவரை அச்சுறுத்திய கரவலை சம்மாட்டி

யாழ்.வடமராட்சியில் ஊடகவியலாளர் மற்றும் சமாச தலைவரை அச்சுறுத்திய கரவலை சம்மாட்டி

குழு நியமனம்

ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன், சட்டத்துறையில் புலமைமிக்க செல்வகுமாரன், தமிழ்மாறன், குருபரன் மற்றும் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவரும் பேராதனை பல்கலைக்கழக அரசியல் கற்கைகள் விரிவுரையாளரும் சட்டத்தரணிமான கலாநிதி சிவகுமார் ஆகியோர் இந்த விடயங்களை கையாள தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று நேற்றைய கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

பொது ஆவணம் தாயாரிக்க பத்து பேர் கொண்ட குழு!தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டத்தில் முடிவு | Member Committee To Prepare Public Document Tnp

அதேசமயம் இந்தக் குழுவினரோடு தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியப் பேரவை ஆகிய நான்கில் சார்பிலும் தலா ஒவ்வொருவரும், அதற்கு மேலதிகமாக கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் இலங்கைத் தமிழரசு கட்சியால் நியமிக்கப்படும் ஒருவரும் என ஐந்து பேர் சேர்ந்து பணியாற்றுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 இந்தக் கூட்டத்தில் நேற்று பங்குபற்ற விரும்பிய சில தரப்புகள் இணையவழி இணைப்பில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்த போதிலும், இது மூடிய அறையில் நடைபெறும் கூட்டம் என்ற பின்புலத்தில் இணையவழி இணைப்புக்கு இடம் அளிக்க கூடாது என ஆட்சேர்ப்பிக்கப்பட்டது.

இந்திய மீனவர்கள் மன்னாரில் கைது! படகும் பறிமுதல்

இந்திய மீனவர்கள் மன்னாரில் கைது! படகும் பறிமுதல்

தமிழ்த் தேசியக் கட்சிகள்

அந்த ஆட்சேபனை ஏற்றுக் கொள்ளப்பட்டதனால் இணையவழியில் யாரையும் இணைப்பதற்கான இணக்கம் ஏற்படவில்லை.

கட்சிகள் தங்கள் சார்பில் பங்குபற்றும் மேற்படி ஐந்து பிரதிநிதிகளையும் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவைக்கு அறிவித்ததும், பேரவை மேற்படி ஐந்து சட்ட விற்பனர்களையும் ஒன்றிணைத்து அடுத்த கூட்டத்தை விரைவில் கூட்டும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பொது ஆவணம் தாயாரிக்க பத்து பேர் கொண்ட குழு!தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டத்தில் முடிவு | Member Committee To Prepare Public Document Tnp

சம்பந்தப்பட்ட ஆவணம் தயாரான பின்னர் தமிழ்த் தேசியக் கட்சிகள் மீண்டும் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையினால் ஒன்று கூட்டப்படும் கூட்டத்தில் அந்த ஆவணத்தை உறுதி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நேற்றைய கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இன்றும் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை! அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

இன்றும் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை! அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US