வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் முன்னணியின் உறுப்பினர் கைது(Photos)
முல்லைத்தீவு-வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த போது அங்கு வைத்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி பகுதியினை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்று வந்த நிலையில் மக்கள் கூட்டத்திற்கு முன்னால் வலுகட்டாயமாக வாகனத்தில் ஏற்றிசெல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
உறவுகள் விசனம்
மேலும் கைது செய்யப்பட்ட நபர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆலயத்தில் பொங்கல் நிகழ்விற்காக வந்திருந்த போதே இவர் பொலிஸாரால் வாகனத்தில் ஏற்றி செல்லப்பட்டுள்ளமை உறவுகள் மத்தியில் அச்சத்தினையும் விசனத்தினையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |