வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஆயிரக்கணக்கில் திரளும் மக்கள் (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.
இந்த பொங்கல் விழாவானது இன்று (05.06.2023) நடைபெற்றுவருகின்றது.
வடக்கு கிழக்கிலயே பல ஆயிரக்கணக்கான பக்கதர்கள் ஒரே நாளில் ஒன்று கூடி வழிபடும் தலமாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் விளங்குகின்றது.
பூசை வழிபாடுகள்
உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதத்தை நிகழ்த்தும் அதிசய ஆலயம் என்ற பெருமையோடு முல்லைத்தீவு நந்திக் கடலோரம் கண்ணகித்தாய் வீற்றிருந்து அருள் பாலித்துக்கொண்டு இருக்கின்றாள்.
இதன்போது இலங்கையின் அனைத்து பாகங்களிலும் இருந்தும் வெளிநாடுகளிலும் இருந்து வருகை தந்து கண்ணகி அம்மனை வழிபடுகின்றார்கள்.
மேலும், தூக்குக் காவடி, பறவைக் காவடி, பாற்செம்பு, தீச்சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை மக்கள் மேற்கொண்டனர்.
இதேவேளை அதிகாலை 4 மணியில் இருந்து பூசைகள், வழிபாடுகள் ஆரம்பமாகி நண்பகல்1.00 மணிவரை நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |