உருகும் பனிக்கட்டிகள்: ஜாம்பி வைரஸ் தொடர்பில் விஞ்ஞானிகள் எச்சரிக்கை
ஆர்க்டிக்கில் பனிக்கட்டிகள் உருகுவதால் ஜாம்பி வைரஸ்கள் வெளியே வர வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
உலகில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செயலற்றிருக்கும் வைரஸ்கள் ஜாம்பி வைரஸ் என்று அழைக்கப்படுகிறது.
48,500 ஆண்டுகளாக செயலிழந்து பனிக்கட்டிகளில் புதைந்திருந்த ஜாம்பி வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு கண்டறிந்தனர்.
விஞ்ஞானிகளின் எச்சரிக்கை
இந்த வைரஸ்கள் மனிதர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தலாம் என கூறப்படும் நிலையில் இது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.
இந்நிலையில், ஆர்க்டிக் மற்றும் பிற இடங்களில் பனிக்கட்டிகளுக்கு அடியில் புதைந்திருக்கும் வைரஸ்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஆர்க்டிக்கில் பனிக்கட்டிகள் உருகுவதால் ஜாம்பி வைரஸ்கள் வெளியே வர வாய்ப்புள்ளது.
இதனால் பேரழிவு தரும் உலகளாவிய சுகாதார அவசர நிலையைத் தூண்டக்கூடும் என்றும் புவி வெப்பமடைதல் காரணமாக அதிகரித்து வரும் வெப்பநிலையால் உறைந்த பனிக்கட்டிகள் உருகத்தொடங்கியதில் இருந்து இந்த அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
