மெல்பன் நகரின் முடக்க நிலை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு
விக்டோரியாவில் சமூகப்பரவல் ஊடாக புதிதாக ஆறு பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மெல்பனுக்கான முடக்கநிலை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்படவுள்ளதாக acting premier James Merlino அறிவித்துள்ளார்.
புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள எவரும் முதியோர் பராமரிப்பு இல்லங்களைச் சேர்ந்தவர்கள் அல்லவென தெரிவிக்கப்படுகிறது. Highlights விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக ஆறு பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மெல்பன் பெருநகரப்பகுதி முழுவதும் முடக்கநிலை மேலதிகமாக ஒரு வாரத்திற்கு நீடிக்கப்படுகிறது. மெல்பன் கோவிட் பரவலின் ஆரம்பப்புள்ளி தெற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள தனிமைப்படுத்தல் விடுதியுடன் தொடர்புபடுகின்றது.
அதேநேரம் புதிதாக தொற்றுக்கண்டவர்களில் ஒருவர் நியூசவுத் வேல்ஸ் மாநிலத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்ததையடுத்து Jervis Bay, Goulburn, Hyams Beach, Vincentia ஆகிய பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் மூவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 51 ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 6 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து விக்டோரியாவில் ஏற்பட்டுள்ள கோவிட் பரவல் காரணமாக தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.
இப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடன் விக்டோரியா முழுவதும் 7 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலை நாளை இரவு 11.59 மணிக்கு முடிவடையவிருந்த நிலையில் Regional விக்டோரியாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாகவும், மெல்பன் பெருநகரப்பகுதி முழுவதும் இம்முடக்கநிலை மேலதிகமாக ஒரு வாரத்திற்கு நீடிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மெல்பனில் வாழ்பவர்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு, தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு, மருத்துவ பராமரிப்பு பெற மற்றும் பராமரிப்பு வழங்க, உடற்பயிற்சி மற்றும் வேலை(அனுமதி வழங்கப்பட்டவர்கள் மட்டும்) ஆகிய ஐந்து காரணங்களுக்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியேற முடியும்.
மக்கள் தமது வீடுகளிலிருந்து 5 கிலோமீட்டர்களுக்கு உட்பட்ட இடங்களுக்கு மட்டுமே பயணம் செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு சற்றே தளர்த்தப்பட்டு, shopping மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றுக்காக வீடுகளிலிருந்து 10 கிலோமீட்டர்கள் வரை பயணம் செய்யலாம்.
மெல்பன் பெருநகரத்திற்கான இம்முடக்கநிலை ஜுன் 10ம் திகதி தளர்த்தப்படும் என தான் நம்புவதாகவும், ஆனால் கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாகவே தளர்த்தப்படும் எனவும் James Merlino தெரிவித்துள்ளார்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 30 நிமிடங்கள் முன்

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
