குச்சவெளி் பிரதேச சபைக்குட்பட்ட காணி பிரச்சினை: ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பு
குச்சவெளி் பிரதேச சபைக்குட்பட்ட காணிப் பிரச்சினை தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு நேற்று (27.04.2023) இடம்பெற்றது.
இந்த சந்திப்பு குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஏ.முபாறக் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபிக்கின் ஏற்பாட்டில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக்கிய ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது.
காணி பிரச்சினைகளுக்கான தீர்வு
இதன்போது புல்மோட்டை அரசிமலை, பொன்மலைக்குடா, குச்சவெளி பிரதேசத்திலுள்ள காணிகள் பல தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டு அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதனால் அவ்விடயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை பற்றியும், திருமலை மாவட்டத்தின் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்ட காணி பிரச்சினைகளுக்கான உரிய நடவடிக்கையினை உடனடியாக எடுக்குமாறு ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளுக்கமைவாக, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க காணி திட்டமிடல் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மாவட்டத்தின் ஏனைய பிரச்சினைகளுக்கான ஒரு தீர்வினை
பெற்றுத்தருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது
உறுதியளித்துள்ளதுடன், சில பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்பட்டதாகவும்
குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஏ.முபாறக் தெரிவித்துள்ளார்..





சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் நேரம் திடீர் மாற்றமா?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
