சுமந்திரனுடனான திடீர் சந்திப்பு : வடக்கு கிழக்கின் சபைகளில் ஆட்சி அமைக்க போவது யார்..!
உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு, ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்த்துள்ளதாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று தமிழரசுக் கட்சியும், சில சபைகளை விட்டுக்கொடுத்து ஏனைய தமிழ் கட்சிகள் ஆட்சியமைப்பதற்குரிய வழிவகைகள் தொடர்பில் ஆராய்வதாக சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தலைவர்களுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், மு.சந்திரகுமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்.....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
