செந்தில் தொண்டமான் மற்றும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல்
தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத்தலைவருமான செந்தில் தொண்டமான் ஆகியோருக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது தொலைபேசி வாயிலாக இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது இந்தியாவில் மறுவாழ்வு மையத்தில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு வீடு குடியிருப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், புலமைப்பரிசில், சுயதொழில் மற்றும் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுத்தல் போன்ற நலன்புரி திட்டங்களை முன்னெடுத்தமைக்கு இலங்கை மக்கள் சார்பாக தனது நன்றியை செந்தில் தொண்டமான் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
மேலும் இலங்கையில் உள்ள மலையக மக்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

டாக்டராக இருந்து ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., 7 ஆண்டுகளுக்கு பிறகு ராஜினாமா செய்து தற்போது செய்யும் வேலை? News Lankasri
