மலையக மக்களுக்கு நிலப்பரப்பற்ற அதிகாரப்பகிர்வு! - ரணிலிடம் வலியுறுத்த மனோ அணி முடிவு
அரசியல் தீர்வு விடயத்தில் மலையக மக்களுக்கு நிலப்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட அதிகாரப்பகிர்வை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவோம் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் சர்வகட்சிக் கூட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு கூறினர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
"தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பில் நீண்டகாலமாகத் தமிழ்த் தலைவர்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தந்தை செல்வா காலம் முதல் இது தொடர்
கதையாகவே உள்ளது.
அவ்வாறில்லாமல் குறுகிய கால அவகாசத்துக்குள் தமிழ் மக்களுக்கு நல்லதொரு தீர்வை
வழங்க வேண்டும் என்பதையும், மலையக மக்களுக்காக நிலப்பரப்பற்ற அதிகாரப்
பகிர்வையும் ஜனாதிபதியிடம் நாம் வலியுறுத்துவோம் என்றனர்.