ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ரணிலுடன் சந்திப்பு (Photos)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் - ஆன்ட்ரே பிராஞ்சுக்கும் (Marc-André Franch) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று (24.07.2023) ஜனாதிபதி அலுவலகத்தில் நடத்தப்பட்டுள்ளது.
கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்திக்கான பல முக்கிய விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.
இலங்கையின் நிதி தொடர்பான சவால்களை முறியடிப்பதற்கும் நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் கடன் மறுசீரமைப்பிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பை வழங்குவதாக மார்க் ஆன்ட்ரே தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத் திட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு கையளித்துள்ளார்.
வேலைத்திட்டத்தின் நோக்கம்
வடக்கு, கிழக்கு மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் இனங்களுக்கிடையில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதுமே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் எனவும், அதற்காக எதிர்காலத்தில் நாட்டில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
மேலும் இலங்கையில் புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதில் இலங்கையும் ஐக்கிய நாடுகள் சபையும் நெருக்கமாக செயற்படவும் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
