சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளை சந்திக்க கோரிக்கை விடுக்கவி்ல்லை : ஹர்ச டி சில்வா
சர்வதேச நாணய நிதியத்தின் வருகை தரும் பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்புக்கு கோரிக்கை விடுத்ததாக வெளியான தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா மறுத்துள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவின் இந்த தகவலுக்கு பதிலளிக்கும் வகையில் ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவை செய்துள்ள ஹர்ச டி சில்வா, வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளில் எதிர்க்கட்சிகளை ஈடுபடுத்துமாறே தான் கோரிக்கை விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் அடுத்த அரசாங்கமாக தெரிவுசெய்யப்படும் பட்சத்தில் இது தொடர்பான உண்மைகள் மற்றும் புள்ளிவிபரங்கள் தொடர்பில் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இந்த முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டே தான் இந்த கோரிக்கையை முன்வைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதனை தவிர தாம் ஒருபோதும் ஏற்கனவே இறுதிச்செய்யப்பட்டு விட்டு உடன்படிக்கை குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் சந்திப்பை கோரவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே பொருளாதாரத்துடன் அரசியல் விளையாட்டில் ஈடுபடவேண்டாம் என்று ஹர்ச, அமைச்சர் செஹான் சேமசிங்கவுக்கு பதிலளித்துள்ளார்.