அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட நேரிடும்: ஆளுங்கட்சி எம்.பி எச்சரிக்கை
அரசாங்கத் தலைவர்களினால் ஆடை அணிந்து கொண்டு வீதியில் செல்ல முடியாத நிலைமை உருவாகியுள்ளதாக ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் பியதிஸ்ஸ (Nimal Piyatissa) தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட விவசாயிகளை நேற்று சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,
வயல்களில், விவசாய நிலங்களில் வேலை செய்ய வேண்டிய விவசாயிகள் இன்று வீதியில் இறங்கிப் போராட்டம் நடாத்துகின்றனர். இந்தப் போராட்டங்களின் பின்னணியில் ஜே.வி.பி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இருப்பதாக ஆளும் கட்சியின் சிலர் கூறுகின்றார்கள்.
எனினும் இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை, மக்கள் தாமாகவே போராட்டங்களை மேற்கொள்கின்றனர். ஆடை அணிந்து கொண்டு சமூகத்திற்குள் பிரவேசிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. மக்கள் எம்மை விரட்டியடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அரசாங்கத்தின் நிகழ்ச்சிகளை முன்னெடுக்கவோ அங்குரார்ப்பணங்களை செய்யவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் எமக்கு மட்டுமன்றி அரசாங்கத் தலைவர்களினாலும் வீதியில் இறங்கி நடக்க முடியாத நிலை உருவாகும்.
அரசாங்கம் 69 இலட்சம் மக்களின் ஆணைக்கு புறம்பான வகையில் செயற்படத் தொடங்கியுள்ளது.
அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட எமக்கு நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
