ஈழத்தமிழர் தொடர்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோள்
சமதா கட்சி மற்றும் ஈழத்தமிழர் நட்புறவு மையக்குழு, முன்னாள் இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் மற்றும் அவரது சகோதரரும், எச்.எம்.கே.பி தொழிற்சங்க தலைவரும், முன்னாள் கர்நாடக சட்டமன்ற உறுப்பினருமான மைக்கேல் பெர்ணாண்டஸ் ஆகியோரை சந்தித்துள்ளனர்.
நாகலாந்து மாநிலம், திமாப்பூரில் இன்று காலை இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் ஈழத்தமிழர் இன்னல்கள் குறித்துக் கலந்துரையாடித் தீர்வுக்கு ஆவன செய்யும்படி சமதா கட்சி மற்றும் ஈழத்தமிழர் நட்புறவு மையக்குழுவலியுறுத்தினார்கள்.
அதற்கு ஜார்ஜ் பெர்ணாண்டஸ் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஈழத்தமிழர்களுக்காக பணியாற்ற நான் தயாராக உள்ளேன். அதற்கான முன்னெடுப்புகளை நான் செய்கிறேன் என்று உறுதியளித்துள்ளார்.
இந்த சந்திப்பில் சமதா கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் என்.ஏ.கோன், பொன்னம்பலம், வர்மா மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த குழுவினருடன் மைக்கேல் பெர்ணாண்டஸ் மற்றும் நாகலாந்து சட்டசபை முன்னாள் சபாநாயகர் தெனிச்சோ துன்யியும் ஆலோசனையில் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






கூலி பட நடிகர் உபேந்திரா மற்றும் மனைவிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! கலக்கத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
