வவுனியாவில் தென்னை முக்கோண வலயம் தொடர்பில் விசேட மீளாய்வுக் கூட்டம்
வடமாகாண தென்னை முக்கோண வலயத்தின் வவுனியா மாவட்டத்தில் மேற்கோள்ளப்பட்ட திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது நேற்று(1) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது வவுனியா மாவட்டத்தில் தென்னை உற்பத்தியை அதிகரிப்பதற்கான செயற்திட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாக ஆராயபட்டதுடன், தென்னை பயிர் செய்கையாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
மீளாய்வுக் கூட்டம்
வடமாகாண தென்னை முக்கோண வலயம் என்ற திட்டத்தின் ஊடாக விவசாயிகளுக்கு கால் ஏக்கர் முதல் 50 ஏக்கர் வரையான காணிகளுக்கு தென்னை பயிர்கள் மானியமாக வழங்கப்படுகின்றது.
அத்துடன், அதற்கான நீர் விநியோக செயற்பாடுகளுக்காக ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் பணமும், தென்னைப் பயிருக்கான உரமும், இதன்போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிரதி அமைச்சர்களான சுந்தரலிங்கம் பிரதீப், உபாலி சமரசிங்க, மாவட்ட செயலாளர் பீ.ஏ.சரத்சந்திர, அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள், தென்னை அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










