புதிய பிரதமருக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பு
இலங்கையின் புதிய பிரதமர் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜீலி சுங் ஆகியோரிற்கு இடையிலான சந்திபொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
ஜீலி சுங் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.
டுவிட்டர் பதிவு
Met with new PM @DCRGunawardena today to discuss ways the US can support the SL people during this challenging period. Essential that leaders uphold due process, access to justice & rule of law as they work to stabilize & rebuild the economy, including negotiations with the IMF. pic.twitter.com/LcTuFnvzPB
— Ambassador Julie Chung (@USAmbSL) July 28, 2022
இந்த கலந்துரையாடலில் தற்போதைய சவாலான காலகட்டத்தில் இலங்கை மக்களுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் வழி முறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் உட்பட, நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை ஸ்திரப்படுத்தவும் மீண்டும் கட்டியெழுப்பவும் தலைவர்கள் பணியாற்றும்போது, நீதிக்கான அணுகல் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை நிலை நிறுத்துவது அவசியம் என இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.