ரணிலுடன் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் முக்கிய சந்திப்பு
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்திக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார்.
இச் சந்திப்பின் போது சர்வகட்சி அரசாங்கத்திற்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்ததாவது,
சர்வக்கட்சி அரசாங்கம்
" சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்னமும் ஸ்தீரமாக வெளிப்படுத்தப்படவில்லை.
சர்வக்கட்சி அரசாங்கத்தில் நாம் இணைய வேண்டுமானால், 6 மாதத்திற்குள் ஒரு தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
அதற்குள் எரிபொருள் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளோம். போராட்டக்காரர்களை அடக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு சர்வதேச நாடுகளும் கண்டனங்களை வெளியிட்டுள்ளன.
நாடு மேலும் பாதிக்கப்படும்
அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள், போராட்டங்களை இன்னமும் தீவிரப்படுத்துமே ஒழிய அதனை ஒருபோதும் கட்டுப்படுத்தாது. நாடும் இதனால் மேலும் பாதிக்கப்படும்.
சர்வகட்சி அரசாங்கமே தீர்வு உலக நாடுகளில் இவ்வாறான பொருளாதாரப் பிரச்சினைகள் வந்தபோதும், சர்வக்கட்சி அரசாங்கங்கள் அமைந்த வரலாறுகள் உள்ளன.
இந்தநிலையில், இன்றைய பேச்சுவார்த்தையின்போதும் நாம் எமது நிலைப்பாட்டை அதிபரிடம் தெரியப்படுத்தவுள்ளோம்.
எமது கோரிக்கைகள் தொடர்பாக அதிபர் எவ்வாறான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறாரோ, அதற்கு இணங்க தான் எமது அடுத்தக்கட்ட நகர்வுகளும் இருக்கும்.
நாட்டில் இப்போதிருக்கும் இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் சர்வக்கட்சி அரசாங்கத்தினாலேயே தீர்வினை காண முடியும் என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம்” என்றார்.
சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியில் பிளவு |