யாழ்.சிவில் சமூக நிலையத்தின் தலைவரை சந்தித்த ரணில்
வடக்கு மாகாணத்திற்கான நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் யாழ். சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த்துக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்று (06.01.2024) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது வடக்கின் சிவில் சமூகத்தில் நிலவும் பல்வேறான பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், அந்தப் பிரச்சினைகளை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாடசாலை அபிவிருத்தி
குறிப்பாக வடக்கு மாகாணத்தில் பல பாடசாலைகளுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் அவற்றை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அருண் சித்தார்த் கோரியுள்ளார்.
இதனையடுத்து அவ்வாறான 100 பாடசாலைகளின் பெயர்களை முன்வைக்குமாறு கோரிய ஜனாதிபதி குறித்த 100 பாடசாலைகளும் உடனடியாக அபிவிருத்தி செய்யப்படும் என யாழ்.சிவில் சமூக நிலையத்திற்கு உறுதியளித்தார்.
பிரதேச செயலகங்கள்
மேலும் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் என்று கூறி சங்கங்களை அமைத்துள்ள காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் இருப்பதாகவும் அவர்கள் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் சிவில் சமூக நிலையத்தின் தலைவர் தெரிவித்தார்.
வடக்கிலுள்ள அரசியல் கட்சிகள் எவ்வாறு செயற்பட்டாலும் சாதிப் பிரச்சினையால் மக்கள் அவதிப்படுவதாகவும், யாழ்ப்பாணத்தை தவிர்த்து கொழும்பில் வாழும் அரசியல்வாதிகள் இப்பிரச்சினை குறித்து குரல் எழுப்பாதது வேதனைக்குரியது என சுட்டிக்காட்டினார்.
இதேவேளை யாழ்.மக்கள் எதிர்நோக்கும் கவனத்தில் கொள்ளப்படாத பல பிரச்சினைகள் அடங்கிய கடிதம் ஒன்றையும் யாழ் சிவில் சமூக நிலையத்தினர் ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
இச்சந்திப்பில், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் யாழ்.சிவில் சமூக நிலையத்தின் செயற்பாட்டாளர் குழுவினர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






செம்மணி அணையா விளக்கு போராட்டம் சொல்லும் செய்தி என்ன..! 17 மணி நேரம் முன்

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
