மன்னாரில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் இளைஞர் சம்மேளன பொதுக்கூட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நான்காவது வருடாந்த சம்மேளன பொதுக்கூட்டமும், மன்னார் தேர்தல் தொகுதிக்கான இளைஞர் சம்மேளன பொதுக்கூட்டமும் இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தலமையில் இடம்பெற்ற இளைஞர் சம்மேளன பொது கூட்டத்தில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அசோக்க பிரியந்த கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மன்னார் மற்றும் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததுடன், இந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டதோடு, இளைஞர் மற்றும் யுவதிகளின் செயற்பாடுகள், எதிர்கால நிலைப்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.









சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
