நாடாளுமன்றில் இடம்பெறும் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம்!
கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டம் நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வருவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, இந்த தீர்மானத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் சபாநாயகரிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டம் நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வந்த ரணில் விக்கிரமசிங்க முதன்முறையாக கட்சித் தலைமைக் கூட்டத்தில் கலந்துகொள்கின்றமை விசேட அம்சமாகும்.
எவ்வாறாயினும், இந்த கூட்டத்தில் சஜித் பிரேமதாச பங்கேற்கவில்லை என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
