யாழில் அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளுக்கும், அண்ணாமலைக்கும் இடையில் சந்திப்பு(Photos)
யாழ்ப்பாணம் வந்திருந்த பாரதிய ஜனதாக்கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளிற்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பானது நேற்றைய தினம் யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கலந்துரையாடலில் வடபகுதி பொருளாதார முன்னேற்றத்திற்கு தமிழகத்துடனான தொடர்பு முக்கியமானது என்பது சுட்டிக்காட்டப்பட்டதோடு, இது வணிக விருத்திக்கு அவசியமானது என்ற விடயங்களும் யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இந்தச் சந்திப்பின் போது யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை மீளத் திறப்பதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும், காங்கேசன்துறையிலிருந்து காரைக்காலுக்கான கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கையடங்கிய மகஜர் பாரதப்பிரதமர் நரேந்திரமோடியிடம் கையளிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த விடயங்களை டெல்லிக்கு எடுத்துச்சென்று நிச்சயமாக விமானநிலையத் திறப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து என்பவற்றிற்கு ஏற்பாடுகள் செய்வதாக அண்ணாமலை உறுதியளித்தார்.
இந்தச்சந்திப்பில் யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவர்
எஸ்.யுகெந்திரா, செயலாளர் தேதேவானந்த் மற்றும் செயற்குழு உறுப்பினர்களான எஸ்.இன்பரூபன், எஸ்.திலீபன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





