துருக்கி - இலங்கையின் நட்புறவு தொடர்பில் சிநேகபூர்வமான சந்திப்பு
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப்க்கும்( S. M. M. Muszhaaraff) துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஆர். டெமட் செகெர்சியோக்லுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு, துருக்கி தூதரகத்தில் இன்று இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் துருக்கி-இலங்கை நட்புறவு தொடர்பான விடயங்கள் பற்றியும் எதிர்காலத்தில் துருக்கி நாட்டினால் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ள முதலீடுகள், இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் துருக்கி கொண்டுள்ள நாட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் இச்சந்திப்பில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தொழிலாதாரங்களை உருவாக்கி வழங்குதல் மற்றும் குடிநீர் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பான செயற்றிட்ட வரைபுகளை நாடாளுமன்ற உறுப்பினர், தூதுவரிடம் கையளித்தார்.
இந்த செயற்றிட்ட வரைபுகளை ஆராய்ந்த தூதுவர் அவற்றை அமுலாக்குவதற்கு ஆவண செய்வதாக உறுதியளித்தார்.
மேலும், விரைவில் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர், துருக்கிய தூதுவருக்கு அழைப்பு விடுத்தார்.
அழைப்பை ஏற்றுக்கொண்ட தூதுவர் அவர்கள் புதிய ஆண்டின் முற்பகுதியில் வருகை
தருவதற்கான தயார்ப்படுத்தல்களை ஆரம்பிப்பதாக உறுதியளித்தார்.


ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri