மொட்டுக் கட்சியின் எம்.பிக்கள் மஹிந்த தலைமையில் முக்கிய சந்திப்பு! தேர்தல் தொடர்பிலும் ஆராய்வு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (07.03.2023) முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பொருளாதார நெருக்கடி
பொருளாதார நெருக்கடி, வரவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் போன்ற விடயங்களுக்குப் பொதுஜன பெரமுன எவ்வாறு உதவ முடியும் என்பது தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை முன்னோக்கிக் கொண்டு செல்லும் வழிகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள்
அமைச்சருமான பஸில் ராஜபக்சவும் கலந்துகொண்டுள்ளார்.
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri