ஜனாதிபதி அநுரவை சந்தித்த இந்திய அரசின் முக்கிய பிரதிநிதி
இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.
பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் மற்றும் இலங்கையில் இந்தியா உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய இருதரப்புத் திட்டங்களை மீளாய்வு செய்வதில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
450 மில்லியன் டொலர்
டித்வா புயலைத் தொடர்ந்து இலங்கைக்கு வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான புனரமைப்புத் தொகுப்பின் ஒரு பகுதியாக, இக்கூட்டத்தின் போது 350 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான கடன் தள்ளுபடி ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டுள்ளன.
மேலும், புயலுக்குப் பிறகு ஏற்பட்ட புனரமைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கொள்முதல் தேவைகளுக்கு ஆதரவளித்து வருவதாக இந்திய உயர் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டிலிருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகனும் அவரது மனைவியும்..! தொழிலதிபரின் திருமணத்தில் கசிந்த தகவல்