நாட்டு மக்களின் நலனுக்காக இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் சஜித் முன்வைத்துள்ள கோரிக்கை
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று(20.01.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
பல அரசியல் தரப்புக்களுடன் கலந்துரையாடல்

இதேவேளை இலங்கையின் ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காக இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லேவும்
கலந்துகொண்டார்.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கையின் பல அரசியல் தரப்புக்களை சந்தித்து தொடர்ந்து கலந்துரையாடலில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan