வடமாகாண ஆளுநருக்கும் இராணுவ தளபதிக்குமிடையில் சந்திப்பு
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகேவை இராணுவ தலைமையகத்தில் சந்தித்துள்ளார்.
இதன்போது வடமாகாண அக்கறை மற்றும் இராணுவத்தின் பங்களிப்பு குறித்து கருத்துகளை பரிமாறிக்கொண்டுள்ளர்.
இந்த சுருக்கமான சந்திப்பின் போது, தீபகற்பத்தில் சிவில் - இராணுவ ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை அடுத்து சிவில் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

சுமுகமான சந்திப்பின் முடிவில் லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் வடமாகாண ஆளுநருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி இலங்கை இராணுவத்தின் நல்லெண்ணத்தை அடையாளப்படுத்தியுள்ளார்.
இராணுவத்தொண்டர் படையின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா மற்றும் துணைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க ஆகியோரும் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri