ரணிலின் நியமனத்தின் பின் மகிந்தவை சந்தித்த எரிக் சொல்ஹெய்ம்! வழங்கியுள்ள உறுதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள, இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு கொழும்பிலுள்ள, முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
மகிந்த வாழ்த்து
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டமைக்கு இதன்போது மகிந்த வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் இலங்கை அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைக்கான தூதுவராக செயற்பட்டமையை, மகிந்த நினைவுகூர்ந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
மகிந்தவிற்கு எரிக் சொல்ஹெய்ம் வழங்கியுள்ள உறுதி
இதேவேளை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், நோர்வே முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு மகிந்த, எரிக் சொல்ஹெய்மிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நோர்வே உதவிகளை வழங்கும் என எரிக் சொல்ஹெய்ம், மகிந்தவிடம் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri