இலங்கைக்கான நெதர்லாந்தின் தூதுவர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இடையில் விசேட சந்திப்பு(Photos)
இலங்கைக்கான நெதர்லாந்தின் தூதுவர் எச்.இ.போனி ஹர்பாக்(Hi Bonnie Harpat) மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று(10.02.2023) திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் மாகாணத்தில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் தூதுவர் கேட்டறிந்துள்ளார்.

கிழக்கு மாகாணம் இயற்கை வளங்கள் நிறைந்த மாகாணம் எனவும், அங்கு முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அபிவிருத்திக்காக பல உதவிகள்
நெதர்லாந்து காலத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட பழைய கட்டிடங்களில் புதிய வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடியதாகவும் அது மிகவும் பெறுமதி வாய்ந்தது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நெதர்லாந்து அரசாங்கம் கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக பல உதவிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சந்திப்பில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, மாகாண
வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஜே.ஜெகநாதன் உட்பட பலர்
கலந்துக்கொண்டுள்ளனர்.
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri